Sunday, March 31, 2013

சல்லடை திரை

சல்லடை திரைக்கு பின்னே உலகத்தை பார்த்து கொண்டிருக்கிறேன்
எனக்கு தெரிந்த காட்சிகள் அந்த நுண்ணிய த்வாரம் போல் சிறியது தான்.

பார்வையை விரித்து பார்த்தாலும் சல்லடை அகறாமல் முழுக்காட்சிகள் காண முடியாது.


மெழுகு பொம்மைகள் நாங்கள்.
வாங்கியவன் உருக்குவான் என்று
இருதயம் மட்டும் கல்லாய் வைத்துகொண்டோம் உருகி விடாமல்.


ஒற்றை வானம்
சிதறிப்  பறக்கும் பறவைகள் ,
அவை ஒற்றை கால் ஊன்றி நிற்க பூமி இல்லை
உண்மை அறிந்து சோர்ந்த பறவைகள் திசை தெரியாமல் பச்சை தேடி பறக்கின்றன.


When i sit to write with my blog doc open. I am totally out of words. No topic. Feeling completely blank and little bit scared also. Feeling like 'hey woman are you really strong enough to write something on a blog? you are just interested that's it. You are not someone who can really write blogs to show your talents to the world!. So limit your blog writing..