Wednesday, January 12, 2011

என்ன தான் சொன்னாலும் நீ என்னோடு நிலைப்பதில்லை
என்னிலை என்னவானாலும் நீங்காமல் நிலைப்பாய் என்று சொன்ன நீ
என்ன தான் சொன்னாலும் நிலையேன் என்று சொன்னாய்

சற்றே சலனமில்லாமல் சென்றன ஆண்டுகள்
நிலையற்ற என் உருவமும் உன் உருவமும்
சிரித்து கொண்டன நீங்கி போனதைப் பார்த்து

சொல்லாமல் கொன்றாய் உன் சிரிப்பொன்றில்
சொல்லியும் கொன்றாய் அது சலிப்பு என்றாய்
சுதந்திரம் நிலையானதா? சொல்லிப்பார் சுதிந்திரமே சுற்றி திரிவது தான்


நிலையற்ற வாழ்வில் நிலைக்க நீ நினைக்க வில்லையோ?
நிலையற்று போயின என் நினைவுகள்
என்ன தான் சொன்னாலும் நீ என்னோடு நிலைப்பதில்லை

No comments:

Post a Comment