Sunday, January 2, 2011

விசித்திர வர்கங்கள்

என்று தொடங்கினோம்
சொல்ல முடியுமா அறிதலை
தாயறிந்து பால் கேட்ட பொழுதா
சுவை அறிந்து தேன் கேட்ட பொழுதா
ஏதேதோ சிந்தனை தூக்கம் தந்த பொழுதா
கலைந்த ஓர் நாள் கனவின் பின்
நரம்பு வேகமாய் துடித்ததே அன்றா?

திக்கென்ற அழகை பார்த்து வேகமாய் துடித்து
எலும்பு கூட்டை தட்டிய இதயம் சொன்னதா

அறிவேன் அறிவேன் என்று சொன்ன போதும்
ஆராய பழக்கப்பட்ட அறிவு ஆராய்ந்து கொண்டே இருக்கிறதே
எவ்வளவு அறிந்தாலும் ஊற்றாய் கேள்விகள்
விடை தேடி ஓய்ந்த கண்கள் சுருங்கிப் பார்த்தன
தன் மகனின் மகனான
அறியா சிறுவனின் வாழ்க்கைத் தேடலை

No comments:

Post a Comment